Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனாவில் பாதசாரதிகள் மீது வாகனம் மோதியதில் 18 பேர் காயம்

In
Updated: 05:36 GMT, Feb 2, 2018 | Published: 05:35 GMT, Feb 2, 2018 |
0 Comments
1231
This post was written by : Elakkiya

சீனாவின் மத்திய ஷாங்காய் பகுதியில் பாதசாரிகள் மீது வான் மோதியதில் குறைந்தது 18 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஷாங்காயில் அமைந்துள்ள ஸ்டார்பக்ஸ் உணவகத்துக்கு வெளிப்புறமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை உள்ளூர் நேரப்படி 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த வாகனம் எரிவாயு குழாய்களை கொண்டிருந்ததாக சமூக ஊடகங்களில் உறுதிசெய்ய முடியாத சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறிருக்க வாகனத்தின் சாரதி உலோக நிறுவனத்தில் பணிபுரியும் 40 வயதுடையவர் என்றும் அவர் குற்றவியல் வரலாற்றை கொண்டிருக்கவில்லை என்றும் ஷாங்காய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும், வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் இவ்வாறு பாதசாரிகள் மீது மோதியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இது பயங்கரவாத தாக்குதலாக அமையுமா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg