Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.எஸ்.எல்: மும்பை அணியை பந்தாடியது ஜேம்ஷெட்பூர் எப்.சி. அணி!

In உதைப்பந்தாட்டம்
Updated: 06:52 GMT, Feb 2, 2018 | Published: 06:52 GMT, Feb 2, 2018 |
0 Comments
1151
This post was written by : Anojkiyan

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின், 61வது லீக் போட்டியில் ஜேம்ஷெட்பூர் எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எப்.சி அணியை வீழ்த்தியது.

நேற்று (வியாழக்கிழமை) மும்பையில் நாடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக விளையாடின.

போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் மும்பை அணியின் சஞ்சு பிரதான் எதிர்பாராத விதமாக எதிரணியினருக்கு ஒரு கோல் அடித்து கொடுத்தார். இதனால் முதல்பாதி நேர ஆட்டத்தில் ஜேம்ஷெட்பூர் அணி 1-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 79வது நிமிடம் மும்பை அணியின் எவர்டன் சாண்டோஸ் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. அதைத்தொடர்ந்து 84வது நிமிடம் ஜேம்ஷெட்பூரின் பிகாஷ் ஜெய்ரூ மேற்கொண்டு ஒரு கோல் அடித்தார். அதன்பின் இறுதிவரை இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஜேம்ஷெட்பூர் எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற ஜேம்ஷெட்பூர் அணி 22 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கும் முன்னேறியது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg