Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பங்குச்சந்தைகளின் வீழ்ச்சியில் தாக்கம் செலுத்தியது வரவுசெலவுத்திட்டம்

In இந்தியா
Updated: 09:59 GMT, Feb 2, 2018 | Published: 09:59 GMT, Feb 2, 2018 |
0 Comments
1131
This post was written by : Kemasiya

புதிய ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தை தொடர்ந்து பங்குகளின் மீது விதிக்கப்பட்ட வரியினால் பங்கு சந்தைகள் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட தகவலின் பிரகாரம், வரவுசெலவுத்திட்டத்தில் பங்குச்சந்தைக்கு விதிக்கப்பட்டுள்ள வரிவிதிப்பின்படி இன்றைய தினம் பங்குச்சந்தைகள் பாரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின்படி, பங்குச்சந்தைகளின் பங்குகள் ஈட்டும் இலாபம் ஒரு லட்சத்திற்கு அதிகமான லாபம் பெறுமாயின் 10வீதம் வரி அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஒருலட்சத்திற்கு குறைவான லாபத்தை ஈட்டும் பட்சத்தில், குறித்த வரிவிதிப்பு தாக்கம் செலுத்தாது.

இந்நிலையில் அரசாங்கம் சுகாதாரத்துறைக்கும், கிராமப்புறங்களுக்கும் என உள்ளக திட்டங்களுக்கு முன்னைய நிதி ஒதுக்கீட்டில் இருந்து 3.3 சதவீதம் உயர்ந்துள்ளது.

எனவே வரவுசெலவுத்திட்டதில் கொண்டுவரப்பட்டுள்ள மேற்குறித்த மாற்றங்கள், பங்குகளின் வீழ்ச்சியை அதிகரித்துள்ளதாகவும், பங்குச்சந்தையின் வீழ்ச்சி தொடருவதற்கான சாத்தியம் உள்ளதாகவும், இதனால் பங்கு வியாபாரிகள் அச்சத்தில் உள்ளதாகவும் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg