Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லண்டன் பிறிட்ஜ் ரயில் நிலைய நடைபாதையில் கத்திக்குத்து

In
Updated: 12:15 GMT, Feb 2, 2018 | Published: 12:14 GMT, Feb 2, 2018 |
0 Comments
1074
This post was written by : Elakkiya
_99856708_gettyimages-458302607

லண்டன் பிறிட்ஜ் ரயில் நிலைய நடைபாதையில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) பரபரப்பான காலை வேளையில் குறித்த ரயில் நிலையத்தில் இடம்பெற்ற கைகலப்பில் இந்த கத்திக்குத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்வத்தை தொடர்ந்து சௌத்பவுண்ட் மற்றும் வடக்கு தடங்கள் மூடப்பட்டதுடன் போக்குவரத்துக்களில் தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg