Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுதந்திர தினம்: உலக நாடுகளிலும் பறக்கவுள்ள இலங்கையின் தேசிய கொடி

In இலங்கை
Updated: 03:54 GMT, Feb 3, 2018 | Published: 03:29 GMT, Feb 3, 2018 |
0 Comments
1243
This post was written by : Kemasiya

இலங்கையின் 70ஆவது சுதந்திரதினத்தை உலகளாவிய ரீதியில் 118 நாடுகளில் இலங்கையின் தேசிய கொடியை ஏற்றி கொண்டாடுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஒரே தேசம்’ என்னும் தொனிப்பொருளில் இலங்கையின் 70ஆவது சுதந்திரதினம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெகுவிமர்சையாக கொண்டாடப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பிரித்தானிய அரச குடும்பத்தினர் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனர்.

அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன், பிரதமர நீதியரசர் பிரசாத் டெப், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, மேல் மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன் உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்கள், முதலமைச்சர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் ஏழாயிரத்திற்கு அதிகமான படைவீரர்கள் கலந்துக்கொண்டு சுதந்திரதின நிகழ்வுகளை சிறப்பிக்கவுள்ளதுடன், தேசிய கீதம் இம்முறையும் சிங்களம் மற்றும் தமிழ்மொழிகளில் இசைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

sfcasc

 

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg