Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூட்டமைப்பின் பிரசாரத்திற்கு மட்டக்களப்பில் பெரும் வரவேற்பு

In இலங்கை
Updated: 05:34 GMT, Feb 3, 2018 | Published: 05:34 GMT, Feb 3, 2018 |
0 Comments
1093
This post was written by : Rajinthan

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல்  பிரசாரக் கூட்டம் ஒன்று நேற்று (02.02.2018) மாலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு ஏராளமாக கிழக்கு மாகாண மக்கள் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கலந்து கொண்டிருந்தார். அவரோடு நாடாளுமன்ற உறுப்பினர்களான,

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,  ரெலோ அமைப்பின் தலைவர்  செல்வம் அடைக்கலநாதன் போன்றோருடன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், சதாசிவம் வியாளேந்திரன். மற்றும், வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும் கலந்து கொண்டிருந்தார்.

பெருமளவான ஆதரவாளர்கள் பொது மக்களின் பங்களிப்புடன் நடைபெற்ற இத் தோர்தல்  பிரசாரக் கூட்டமானது, களுவாஞ்சிகுடி பிரதான வீதியருகில் அமைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர்.சீ.மூ.இராசமாணிக்கத்தின் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆரம்மாகியது.

இக் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்கள் மக்களுக்கு நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் விளக்கவுரைகளை வழங்கினர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg