Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகளாவிய கல்வித்திட்டத்துக்காக பிரான்ஸ் நிதியுதவி

In ஐரோப்பா
Updated: 05:45 GMT, Feb 3, 2018 | Published: 05:45 GMT, Feb 3, 2018 |
0 Comments
1095
This post was written by : Suganthini

உலகளாவிய ரீதியிலான கல்வித்திட்டத்துக்காக, 200 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்குவதாக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் உறுதியளித்துள்ளார்.

செனிகல் டக்காரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேசப் பாடசாலையொன்றை, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் மற்றும் செனிகல் ஜனாதிபதி மாக்கி சால் (Macky Sall) ஆகியோர் ஒன்றாக இணைந்து நேற்று (வெள்ளிக்கிழமை) திறந்துவைத்துள்ளனர். இதன் பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே, நிதியுதவி அளிப்பதாக, அவர் உறுதியளித்துள்ளார்.

இந்தப் பாடசாலை திறப்பு விழாவின் பின்னர், பாடசாலையை சுற்றிப் பார்வையிட்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், மாணவர்களுடனும் கலந்துரையாடியுள்ளார்

உலகளாவிய ரீதியில் கல்வித்திட்டத்தை   முன்னெடுப்பதற்காக, செனிகல் மற்றும் பிரான்ஸ் அரசாங்கங்கள் ஒன்றாக இணைந்து செயற்படுகின்றன. ஒவ்வொரு பிள்ளையினதும் அடிப்படைக் கல்வியை உறுதிசெய்வதற்காக, 65 வளர்முக நாடுகள் ஆதரிக்கும் முன்முயற்சியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg