Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதியும் பிரதமரும் பெரும்பான்மையினருக்கு உண்மையை விளக்க வேண்டும்- சம்பந்தன்

In இலங்கை
Updated: 06:58 GMT, Feb 3, 2018 | Published: 06:58 GMT, Feb 3, 2018 |
0 Comments
1240
This post was written by : Rajinthan

இத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றாக இணைந்து அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கும், பெரும்பான்மையின மக்களுக்கு உண்மையை விளக்குவதற்கும் முயற்சிக்க வேண்டும். நாங்கள் ஒரு உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர் நேக்கிக் கொண்டு இருக்கின்றோம். இது ஒரு சாதாரணமான உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அல்ல. இது இன்றய சூழலில் சர்வதேச முக்கியத்துவம் கொண்ட தேர்தலாகவே நான்கருதுகின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா சம்பந்தன் அவர்கள் தெரிவித்தார்.

உள்ளுராட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மாலை (02) களுவாஞ்சிகுடியில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம் அவர் தலையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில்  கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

நாங்கள் நிற்சயமாக ஒற்றையாட்சியை ஏற்கப்போவதில்லை, அதேசமயம் நாங்கள் தமிழீழத்தையும் கேட்கவில்லை, ஒருமித்த நாட்டுக்குள் பிரிபடாத நாட்டுக்குள் பிரிபட முடியாத நாட்டுக்குள் எமது இறையாண்மையின் அடிப்படையில் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் நாங்கள் இந்த நாட்டுக்குள் சமஅதிகாரத்துடன் வாழ்வதற்கு எமக்கு உரித்துண்டு.

இத்தேர்தலின் பின்னர்  ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றாக இணைந்து அரசியல்சாசனத்தை உருவாக்குவதற்கும் அத்தோடு பெரும்பான்மையின மக்களுக்கு உண்மையை விளக்குவதற்கும் அவர்கள் முயற்சிக்க வேண்டும்.

நாங்கள் நிற்சயமாக ஒற்றையாட்சியை ஏற்கப்போவதில்லை, அதேசமயம் நாங்கள் தமிழீழத்தையும் கேட்கவில்லை, ஒருமித்த நாட்டுக்குள் பிரிபடாத நாட்டுக்குள்  எமது இறையாண்மையின் அடிப்படையில் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் நாங்கள் இந்த நாட்டுக்குள் சமஅதிகாரத்துடன் வாழ்வதற்கு எமக்கு உரித்துண்டு. அது அங்கிகரிக்கப்பட வேண்டும் என்றே கேட்கின்றோம்.

தற்போது அரசியல் தீர்வுக்கான வேலைகள் நடைபெறுகின்றது அது வெற்றி பெறவேண்டும் அதற்கு நாங்கள் போதிய ஒத்துழைப்பை நல்குகின்றோம். ஆனால் அவர்களின் தவறின் காரணமாக இந்த கருமம் நிறைவேற்றப்படவிட்டால் இந்த நிலமையை தொடரமுடியாது எம்மீது திணிக்கப்பட்ட ஒரு ஆட்சியை தொடர்ந்து ஏற்றுக்கொள்ள அவசியமில்லை அதற்கு எதிராக நாங்கள் அந்த ஆட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும். இந்த அரசியல் சாசனம்  இந்த நாட்டில் வாழுகின்ற அனைவருக்கும் தேவை. ஒரு புதிய அரசியல் சாசனம் இல்லாமல் இந்த நாடே சீரழிந்து வருகின்றது.

எமது மக்கள் 2015 ஆம் ஆண்டு வாக்களித்து ஒரு மாற்றத்தினை ஏற்படுத்திய பொழு எமது மக்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நாட்டில் புதிய ஆட்சி ஏற்றபட்டவுடன் ஒரு புதிய ஆட்சிமுறை உருவாகும் அந்த ஆட்சிமுறையின் கீழ் நாங்கள் சமத்துவமாக, சமாதனமாக, சுயமரியாதையுடன் இந்த நாட்டில் சம பிரஜைகளாக வாழ்வோம் என்ற நம்பிக்கை.  அது நிறைவேற்றப்படவேண்டும். அது நிறைவேற்றப்படாதுவிட்டால் இந்த நாட்டிற்கு எதிர்காலம் இல்லை அதுதான் உண்மை.

நாங்கள் 1956 ஆம் தொடக்கம் இன்றுவரை எமது கொள்கையில் இருந்து மாறவில்லை மாறமாட்டடோம், அதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். நாங்கள் மாறவேண்டிய தேவையில்லை. ஆனால் ஒருமித்த பிரிக்கப்படாத நாட்டுக்குள் நாங்கள் சமபிரஜையாக வாழ்வதற்கு விரும்புகின்றோம். அதற்கு எமது உள்ளக சுயநிர்ணய உரிமை அங்கிகரிக்கப்பட்டு அதிகார பகிர்வு மூலமாக போதிய அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும். இதுவே எமது முடிவு. இந்த தேர்தல்முடிவு அதனை ஊர்ஜிதப்படுத்த வேண்டும். இந்த செய்தி சர்வதேசத்திற்கு போகவேணடும் உங்களை அன்பாகவும் கேட்டு கொள்வது என்ன வென்றால் வீட்டுக்கு வாக்களித்து எமக்க திடமான வெற்றியை நீங்கள் வழங்க வேண்டும். எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg