Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்ச்சைக்குரிய குறிப்பாணை: ட்ரம்ப்புக்கு ஜனநாயகக் கட்சியினர் எச்சரிக்கை

In
Updated: 06:53 GMT, Feb 3, 2018 | Published: 06:53 GMT, Feb 3, 2018 |
0 Comments
1215
This post was written by : Suganthini

அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு காணப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்கும் சிறப்பு விசாரணைக் குழுவைத் தண்டிக்க சர்ச்சைக்குரிய குறிப்பாணையைப் பயன்படுத்த வேண்டாமென்று, ஜனநாயகக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கே, அவர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) எச்சரித்துள்ளனர்.

அவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கை, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நிக்சனின் காலத்துக்குப் பின்னர், இதுவரையில் கண்டிராத அரசியல் சாசன நெருக்கடியை உருவாக்குமெனவும், அவர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான ஃஎப்.பி.ஐ., அதனுடைய அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதாக குடியரசுக் கட்சியினரின் குறிப்பாணையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் குறிப்பாணை அறிவிப்பை உறுதிப்படுத்தியுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், இதுவொரு சங்கடத்துக்குரிய விடயத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்பின் உதவியாளரிடம் உளவு பார்க்க ஆதாரமற்ற சான்றுகளை ஃஎப்.பி.ஐ. பயன்படுத்தியதாக குடியரசுக் கட்சியினரின் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ட்ரம்ப்பின் தேர்தல் பிரசாரத்துக்கும், ரஷ்யாவுக்குமிடையில் தொடர்பிருந்ததாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக, விசாரணை செய்வதை சீர்குலைக்கும் வகையில், மேற்படி குறிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஜனநாயகக் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை ட்ரம்ப் மறுத்து வருகின்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg