Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முஸ்லிம் காங்கிரஸ் நேற்று முளைத்த கட்சியல்ல- ஹக்கீம்

In இலங்கை
Updated: 08:50 GMT, Feb 3, 2018 | Published: 08:50 GMT, Feb 3, 2018 |
0 Comments
1144
This post was written by : Rajinthan

முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற இந்த இயக்கம் பூர்வீக அடையாளத்தைக் கொண்ட இயக்கம் இன்று நேற்று முளைத்த  கட்சியல்ல முஸ்லிம் காங்கிரஸ்.அநாதப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவலாக நாங்கள் பல இடங்களிலே முஸ்லிம் பிரதேசங்களின் ஆட்சியை  எங்களுடைய கைகளிலே வைத்துக் கொண்டு இருக்கின்றோம் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

புத்தளம் மாவட்டத்தில் உள்ள உள்ளளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம் பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்பேதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்தத் தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், “நஸ்மி யாரு இவர் அசல் ஸ்ரீ லங்கா காரன் அவங்கிட்ட ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் பதவியைக் கொடுத்தா என்ன நடக்கும்.இப்ப றிஸாட் பதூர்தீனுக்கு குத்தைக்கு கொடுத்துள்ளாங்க கட்சிய அழிக்க வேளையில அவங்க செய்கிற மிகப் பெரிய ஒரு சதித் திட்டம் தான் இப்போது அரங்கேரிங்க் கொண்டு இருக்கு இதனைப் போல அசல் ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள் பார்த்து இந்தக் கட்சிக்கு இந்தக் கதி நேர்ந்து விட்டது என்று கவலைப்படுகின்றார்கள்.

எனவே தான் முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற இந்த இயக்கம் பூர்வீக அடையாளத்தைக் கொண்ட இயக்கம் இன்று நேற்று முளைத்த காளன் கட்சியல்ல முஸ்லிம் காங்கிரஸ்.அநாதப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவலாக நாங்கள் பல இடங்களிலே முஸ்லிம் பிரதேசங்களின் ஆட்சியை  எங்களுடைய கைகளிலே வைத்துக் கொண்டு இருக்கின்றோம்” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg