Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்யாவின் அணுவாயுத வளர்ச்சி: அமெரிக்கா கவலை

In
Updated: 08:30 GMT, Feb 3, 2018 | Published: 08:30 GMT, Feb 3, 2018 |
0 Comments
1252
This post was written by : Suganthini

ரஷ்யாவின் அணுவாயுத வளர்ச்சி தொடர்பாக அமெரிக்கா கவலை கொண்டுள்ளதாக, கொள்கை ஆவணமொன்று தெரிவித்துள்ளது.

அணுசக்தி ஆய்வுநிலை (Nuclear Posture Review) எனப்படும் பென்டகன் கொள்கை ஆவணம், இது தொடர்பான தகவலை நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளது.

அந்த ஆவணத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘ரஷ்யாவின் தந்திரோபாயமான அணுவாயுத வளர்ச்சி தொடர்பாக அமெரிக்கா கவலை கொண்டுள்ளதுடன், ரஷ்யாவை எதிர்த்து நிற்க எண்ணியுள்ள அமெரிக்காவும் அணுவாயுதத் திறன்களை விரிவுபடுத்தவுள்ளது. இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தினர், அணுவாயுதங்களை மேம்படுத்தவும், புதிய வகையிலான சிறிய அணு குண்டுகளை உற்பத்தி செய்யவும் எண்ணியுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் சவால்களை எதிர்கொள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் கடின உழைப்புக்கான சமீபத்திய அறிகுறியாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, இரண்டு நாடுகளுக்குமிடையிலும், தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்துமென, சில விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg