Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாநில உரிமையை அ.தி.மு.க. விட்டுக்கொடுக்கவில்லை: ஜெயக்குமார்

In இந்தியா
Updated: 09:47 GMT, Feb 3, 2018 | Published: 09:47 GMT, Feb 3, 2018 |
0 Comments
1173
This post was written by : Kemasiya

மாநிலத்தின் உரிமையை அ.தி.மு.க அரசு எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்காது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இத தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஜி.எஸ்.டி.இல் கூட சில திருத்தங்களை கூறி அவை மாற்றம் செய்யப்பட்ட பின்னரே தமிழக அரசு ஏற்றுக்கொண்டது.

அதே போன்று தி.மு.க.வினால் தாரை வார்க்கப்பட்ட கச்சதீவு விடயம் மற்றும் காவிரிநீர் விடயம் ஆகியவற்றில் உரிமைகளை பெற்றுக்கொள்ள தொடர்ந்தும் முயற்சிப்பது அ.தி.மு.க. அரசு” எனவே ஒரு போதும் மாநிலத்தை விட்டு கொடுத்து இந்த அரசு செயற்படவில்லை.

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து தமிழகத்திற்கு தேவையானவற்றை பெற்று கொள்கிறோம். எந்த திட்டத்திலும் மாநிலத்திற்கு தேவையானதை கேட்டுப்பெறுகிறோம்  என அமைச்சர் கூறியிருந்தார்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg