Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சோனி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பதவி விலகுகிறார்!

In வணிகம்
Updated: 09:47 GMT, Feb 3, 2018 | Published: 09:47 GMT, Feb 3, 2018 |
0 Comments
1150
This post was written by : Risha

கணினி ஊடகத் தயாரிப்புத் துறையிலும், மின்னணு சாதன உற்பத்தியிலும் ஆதிக்கம் செலுத்திவரும் சோனி நிறுவனத்தின் தலைமை நிர்வாக பொறுப்பிலிருந்து கஸுவோ ஹிறாய் பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது பொறுப்புக்கள் சோனி நிறுவனத்தின் நிதித் தலைவர் கெனிச்சிரோ யொஷிடாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. அதன்படி, அவர் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் தலைமை நிர்வாகியாக கடமைகளை பொறுப்பேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், நிறுவனத் தலைவர் பதவியில் ஹிறாய் தொடர்ந்தும் நீடிப்பார் என்று கூறப்படுகிறது.

சோனி நிறுவனம் தற்போது ஒரு தீர்க்கமான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகின்ற நிலையில், தலைமைத்துவத்தினை புதிய நிர்வாகமொன்றிடம் ஒப்படைப்பதற்கு இதுவே உரிய தருணம் என ஹிறாய் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சோனி நிறுவனத்தினது எதிர்காலத்திற்கும், தனது வாழ்வில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கான முடிவே இதுவெனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், சோனி நிறுவனத்தின் சர்வதேச போட்டித் தன்மையை மேம்படுத்த பாடுபடுவதாக கெனிச்சிரோ யொஷிடா உறுதியளித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg