Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் இடம்பெறும் சாத்தியம்: தினகரன்

In இந்தியா
Updated: 10:06 GMT, Feb 3, 2018 | Published: 10:06 GMT, Feb 3, 2018 |
0 Comments
1193
This post was written by : Kemasiya

மக்களவைத் தேர்தல் வரும் போது தமிழக சட்டமன்ற தேர்தலும் இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் இன்று (வெள்ளிக்கிழமை) அண்ணா சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய தினகரன், அதன் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்துள்ளார்.

“இனிவரும் எந்த தேர்தலிலும் அ.தி.மு.க வெற்றிபெற முடியாது. மத்திய அரசின் வரவுசெலவுத்திட்டத்தில் எந்தவித வளர்ச்சியும் இல்லை.

தமிழகத்தின் உரிமைக்காகவும், வளர்ச்சிக்காகவும் தமிழகத்தை எவருக்கும் விட்டுக்கொடுக்காமல் கட்டிக்காத்த இரும்புபெண்மணி ஜெயலலிதா.

ஆனால் தற்போதைய ஆட்சியில் தமிழகம் அடைமானம் வைக்கப்படுகிறது. மாநில உரிமைகள் பறிபோகின்றன.

இத்தகைய ஒரு ஆட்சியாளர்கள் இடம்பெறப்போகும் தேர்தல்களில் மக்கள் தமக்கு வாக்களிப்பார்கள் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும்.

இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதே கட்சிகளினதும் மக்களினதும் நோக்கம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg