Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்வான்சீயில் ஆசிரியர்களிடமிருந்து வாகனத் தரிப்பிடக் கட்டணம் அறவிடத் தீர்மானம்!

In
Updated: 10:30 GMT, Feb 3, 2018 | Published: 10:29 GMT, Feb 3, 2018 |
0 Comments
1090
This post was written by : Suganthini

வேல்ஸின் ஸ்வான்சீ (Swansea ) நகரில், ஆசிரியர்களிடமிருந்து வாகனத் தரிப்பிடக் கட்டணம் அறவிடும் திட்டத்துக்கு, வேல்ஸ் ஆசிரியர் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

ஸ்வான்சீ நகரிலுள்ள பாடசாலைகளில் வாகனங்களை நிறுத்திவைக்கும் ஆசிரியர்களிடமிருந்து, வாகனத் தரிப்பிடக் கட்டணம் அறவிடுவது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றது.

ஆசிரியர்களின் சம்பளத்தைப் பொறுத்து கட்டணத்தொகையை தீர்மானிப்பது தொடர்பாக ஒவ்வொரு பாடசாலைகளும் தீர்மானிக்க வேண்டுமென்பதுடன், ஆசிரியர்களிடமிருந்து அறவிடப்படும் வாகனத் தரிப்பிடக் கட்டணம் பாடசாலைகளின் வரவு –செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்படுமென, ஸ்வான்சீ கவுன்ஸில் நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தினூடாக பாடசாலைகளுக்கு மேலதிக நிதியுதவி கிடைக்குமெனவும், ஸ்வான்சீ கவுன்ஸில் கூறியுள்ளது.

இருப்பினும், இது தொடர்பான தீர்மானம் இன்னும் எட்டப்படவில்லை. எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதிக்குள் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுமெனவும், ஸ்வான்சீ கவுன்ஸில் கூறியுள்ளது.

இதேவேளை, ஸ்வான்சீ கவுன்ஸிலின் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள வேல்ஸ் ஆசிரியர் சங்கம், இது ஆசிரியர்களைப் பாதிக்குமெனவும் கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg