Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒன்ராறியோவில் பேருந்துடன் வான் மோதியதில் சிறுவர்கள் உட்பட எட்டுபேர் காயம்

In கனடா
Updated: 11:20 GMT, Feb 3, 2018 | Published: 11:18 GMT, Feb 3, 2018 |
0 Comments
1078
This post was written by : Elakkiya

ஒன்ராறியோவில் பேரூந்து ஒன்றுடன் மாணவர்களை ஏற்றிச் சென்ற வான்மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு சிறுவர்கள் உட்பட எட்டுபேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒன்ராறியோவின் மேற்கு பார்ரியிலிருந்து 45 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள நெடுஞ்சாலை 26இல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வானில் பயணித்த எட்டுபேரே காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 4 , 8, 10, 15 வயது சிறுவர்களுடன் இரண்டு இளையோரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. பேரூந்தில் பயணித்தவர்களுக்கு பலத்த காயங்கள் எவையும் ஏற்படவில்லை.

விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg