Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய தேர்தல் முறை பெண்களுக்கான சந்தர்ப்பங்களை வழங்குகிறது – மங்கள சமரவீர

In இலங்கை
Updated: 11:22 GMT, Feb 3, 2018 | Published: 11:22 GMT, Feb 3, 2018 |
0 Comments
1057
This post was written by : Rajinthan

புதிய தேர்தல்  முறைமையானது பெண்களுக்கு சிறந்த சந்தர்ப்பங்களை வழங்குகின்றதென நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று (சனிக்கிழமை) அக்குரஸ்ஸ தியலபே பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அமைச்சர் மங்கள சமரவீர கலந்துகொண்டு உரையாற்றினார். இதன் போது அவர் கூறுகையில்.

“அன்று ஒவ்வொரு இடங்களில் இருந்தும் வாக்குகளை சேர்த்துதான் மந்திரிமார்களை உருவாக்கினோம். அதனால் ஒரு குறித்த பிரதேசத்திற்கு மட்டும் வேலைசெய்யமுடியாத நிலைமை காணப்பட்டது.

இதனால் பின்னர் 2015ஆம் ஆண்டு பதவிக்கு வந்த நாங்கள் பிரதமரோடு கதைத்து முடிவுக்கு வந்தோம். அவரவர் கிராமத்திலேயே இருந்து மந்திரிமார்களை உருவாக்கி அப்பிரதேசத்தையே அபிவிருத்திசெய்யக்கூடிய முறையை கொண்டுவந்தோம்.

அந்த முறைதான் தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த புதிய முறையினால் பெண்களுக்கு சிறந்த ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். 51 வீதமான பெண்கள் இருக்கின்ற இந் நாட்டில் ஏனைய துரைகளில் பெண்களின் பங்களிப்பு குறைவானதாக உள்ளது. அதனால் இந்த தவறை திருத்துவதற்காக ஒரு சட்டத்தை கொண்டு வந்தோம் உள்ளூராட்சி சபைத்தேர்தலில் தோல்வியுற்றாலும்  வெற்றியீட்டினாலும் நூற்றுக்கு 25 வீதம் பெண்கள் எல்லா பிரதேசசபைகளிலும் இருக்கவேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg