Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

48 வருடங்களுக்கு முன் ஆஸியில் 3 சிறுவர்கள் மாயம்: தேடும் பணி தொடர்கின்றது

In
Updated: 11:26 GMT, Feb 3, 2018 | Published: 11:26 GMT, Feb 3, 2018 |
0 Comments
1125
This post was written by : Suganthini

48 வருடங்களுக்கு முன்னர், அவுஸ்ரேலியாவின் அடிலெய்டு நகரில் காணாமல் போன 3 சிறுவர்களைத் தேடும் நடவடிக்கை இன்றுவரை  தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தச் சிறுவர்கள் தொடர்பாகத் தகவல் அறியும் முகமாக, அடிலெய்டு நகரிலுள்ள தொழிற்சாலையொன்றின் வளாகத்தில் தோண்டும் நடவடிக்கையை, அந்நாட்டுப் பொலிஸார் நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்தனர்.

1966ஆம் ஆண்டு, அவுஸ்ரேலியாவின் அடிலெய்டு கடற்கரைக்குச் சென்ற இந்தச் சிறுவர்கள் மர்மமான முறையில் காணாமல் போயிருந்தனர். கிராண்ட் (வயது 4), அர்னா (வயது 7), ஜேன் (வயது 9) ஆகியோரே காணாமல் போயிருந்ததுடன், இன்றுவரை இவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்தச் சிறுவர்கள் காணாமல் போனமை தொடர்பான வழக்கில் தொடர்புடைய ஒருவரால், ஹரி பீப்ஸ் எனும் தொழிலதிபர், முன்பொரு காலத்தில் சொந்தமாகக் கொண்டிருந்த தொழிற்சாலை வளாக மண்ணின் தன்மையில் ஒருவித ஒழுங்கின்மை அண்மையில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அவ்வளாகத்தில் நேற்று தோண்டப்பட்டபோதும், எவ்வித ஆதாரங்களும் கிடைக்காமையால், அம்முயற்சி நிறுத்தப்பட்டது.

அதே வளாகத்தின் வேறொரு பகுதி கடந்த 2013ஆம் ஆண்டில் தோண்டப்பட்டது. அப்போதும், இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்தச் சிறுவர்கள் காணாமல் போன மர்மம், அந்நாட்டில் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சாக உள்ளது. இந்த வழக்கின் மர்மத்தை போக்கும் வகையில் தகவல் வழங்குபவர்களுக்கு, 10 லட்சம் அவுஸ்ரேலிய டொலர் சன்மானமாக வழங்கப்படுமென, தெற்கு அவுஸ்ரேலிய மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg