Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்கொரிய வைத்தியசாலையில் தீ: நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்

In உலகம்
Updated: 11:46 GMT, Feb 3, 2018 | Published: 11:46 GMT, Feb 3, 2018 |
0 Comments
1276
This post was written by : Suganthini

தென்கொரியாவின் சியோல் நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில்  இன்று (சனிக்கிழமை) காலை தீ பரவியதைத் தொடர்ந்து, அவ்வைத்தியசாலையிலிருந்த நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக, வைத்தியசாலை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இருப்பினும், இது தொடர்பான சேத விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இந்த வைத்தியசாலையின் மூன்றாவது மாடியில் தீ பரவியுள்ளது. இவ்வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்கள் உட்பட 307 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இவ்வாறிருக்க, கடந்த ஜனவரி மாத இறுதியில் தென்கொரியாவின் மிர்யங் பகுதியிலுள்ள வைத்தியசாலையொன்றில் தீ பரவியதன் காரணமாக 40 பேர் உயிரிழந்ததுடன், 150க்கும் மேற்பட்டோர் எரிகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg