Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சம்பந்தன் பொய் சொல்கின்றார்: வட. மாகாணசபை உறுப்பினர்

In இலங்கை
Updated: 17:21 GMT, Feb 3, 2018 | Published: 12:36 GMT, Feb 3, 2018 |
0 Comments
1165
This post was written by : Rajinthan

விடுதலைப் புலிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கவில்லை என தெரிவித்து பொய் செல்கின்றார் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்,  என வட மாகாணசபை உறுப்பினர் எம். தியாகராசா தெரிவித்தார்.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் பொதுக்கூட்டம் வவுனியா கலைமகள் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும்  தெரிவித்த அவர்,

விடுதலைப்புலிகள் தமிழ் தேசியக்கூட்டமைப்பை உருவாக்கவில்லை என தெரிவித்து பொய் செல்கின்றார் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன். பகிரங்கமாக உங்களால் மக்கள் முன்னிலையில் அதனை சொல்லமுடியுமா என கேட்கின்றேன்.

கிளிநொச்சியை சேர்ந்த சிறிதரனை தழிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக பாராளுமன்றம் அனுப்பிய பெருமை விடுதலைப் புலிகளையே சாரும். ஆனால் அவ்வாறானவரே இன்று இவ் விடயமாக அமைதியாக இருக்கின்றார். ஏனெனில் தமிழரசுக்கட்சி எந்த அபிப்பிராயங்களையும் யாரிடமும் கேட்டகாமல் தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றது.

இந்நிலையிலேயே இந்த தேர்தலில் தன்னுடைய சொந்த மகனை மாவை களம் இறக்கியிருப்பது, தனக்கு அடுத்ததாக தலைமை தாங்குவதற்காகவேயாகும். இவ்வாறு குடும்ப அரசியல் செய்கின்ற தலைமைகளா தமிழர்களுக்கு தேவை என்பதை தமிழ் மக்கள் உணரவேண்டும்.

மாவை சேனாதிராஜா தனது மகனை தலைவராக கொண்டு வர நினைப்பது பெரும் துரோகம். படித்த ஒருவர் சட்டத்தரணியான ஒருவரான சுமந்திரன் அக் கட்சியில் இருக்கும் போது அவரை அடுத்த தலைவராக்காமல் தமது மகனை தலைவராக கொண்டுவர நினைப்பது தவறு.

அது மட்டுமன்றி மாவை சேனாதிராஜாவுக்கு இவ்வளவு பணம் எவ்வாறு வந்தது என்பதனை தேர்தல் முடிந்த பின்னர் தேர்தல் ஆணையாளர் மூலமாக கேட்பேன்.  2 கோடிக்காக பேரம் பேசியவர்கள் அரசியல் கைதிகளுக்காக பேரம் பேசினீர்களா, காணாமல் போனோர் விடயம் தொடர்பாக பேரம் பேசினீர்களா, காணி விடங்கள் தொடர்பாக பேரம் பேசினீர்களா முள்ளிவாய்க்காலில் இழந்த சொத்துக்களுக்காக பேரம் பேசினீர்களா கணவனை பிள்ளைகளை இழந்தவர்கள் தொடர்பாக தாய் தந்தையை இழந்தவர்கள் தொடர்பாக அவர்களின் மேம்பாட்டுக்காக பேரம் பேசினீர்களா.

நாங்கள் தமிழனாக வாழவேண்டுமாக இருந்தால் ஏனைய சமூகத்துடன் சமமாக நாம் மதிக்கப்படவேண்டுமாக இருந்தால் மாற்றுத்தலைமை எமக்கு தேவையாகவுள்ளது.  அந்த தலமை  தமிழர் விடுதலைக்கூட்டணியினூடாக மிக விரைவில் உருவாகும் என தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg