Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோழி ரசம் செய்வது எப்படி?

In
Updated: 12:19 GMT, Feb 3, 2018 | Published: 12:19 GMT, Feb 3, 2018 |
0 Comments
1039
This post was written by : Puvanes

கோழி அசைவபிரியர்களுக்கு பிடித்தமான உணவுகளில் ஒன்று. விதம் விதமாக கோழியில் பல்வேறு உணவுகளை தயாரிக்கலாம். வருவல், பொரியல், டெவல், பிரியாணி என கணக்கற்ற உணவுகளை சமைக்க கோழி பொருத்தமானது. இதே கோழியில் ரசம் செய்வது எப்படி என்ற செய்முறையைப் பார்க்கலாம்.

வாணலியில் தூள் மிளகு, சீரகம், சோம்பு, தனியா, காய்ந்த மிளகாய் சேர்த்து எண்ணெய் தவிர்த்து சிறிது நேரம் வறுத்த பின்னர் பொடி செய்து கொள்ளவும். எண்ணெய் சேர்த்து கோழியை லேசாக வதக்கிக் கொள்ளவும்.

அதனோடு கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தட்டிய பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும், ரசத்திற்கு தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கோழியை நன்கு வேக வைத்துக்கொள்ளவும்.

வெந்த கோழியை அரைத்து வைத்திருக்கும் பொடியைச் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கிய பின்னர் கொத்தமல்லி இலைகளைத் தூவி எடுக்க கோழி ரசம் தயார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg