Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பீட்ஸாவை நாமே தயாரிக்கலாம்!

In
Updated: 12:26 GMT, Feb 3, 2018 | Published: 12:26 GMT, Feb 3, 2018 |
0 Comments
1071
This post was written by : Puvanes

பீட்ஸா நாகரீக உணவுகளில் பிரதானம். குறிப்பாக இந்த பீட்ஸாவின் விலை சற்றே அதிகம் என்பதால் பலர் அதனைச் சுவைத்திருக்கமாட்டார்கள் ஆதனால் பீட்ஸா பணக்கார உணவுகளில் ஒன்றாக மாறிப்போய் விட்டது என்றும் கூறலாம்.

வீட்டிலேயே இந்த பீட்ஸாவை சுவையாக தயாரிக்கலாம் அது ஒன்றும் அத்தனை கடினமான சமையல் அல்ல. பீட்ஸா சுவைக்க தயாராகிக் கொள்ளவும் இதோ செய்முறை,

காய்கறிகளை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். வெதுவெதுப்பான தண்ணீரில், ஈஸ்ட், உப்பு மற்றும் சீனி சேர்த்து நன்றாக கலக்கி பின்னர் பின் ஒரு கப் மைதாவை சேர்த்து நன்கு கலக்கிக் கலவையை 10 நிமிடம் எடுத்து வைக்கவும்.

10 நிமிடம் கழித்து, 3 கப் மைதாவில் 4 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கலக்கி வைத்த கலவையை சேர்த்து நன்கு பிசைய வேண்டும். பரோட்டாவுக்கு பிசையும் மாவை விட சற்று மிருதுவாக பிசைய வேண்டும்.

பிசைந்த மாவினை ஒரு ஈரத் துணியை கொண்டு மூடி ஒரு மணி நேரம் நன்றாக ஊற விடவும். ஒரு மணி நேரம் கழித்து மாவினை எடுத்து பார்க்கும் போது அது இருமடங்காக அதிகரித்து இருக்கும். மாவினை வெளியே எடுத்து மீண்டும் நன்றாக பிசையவும்.

கையில் ஒட்டினால் சிறிது உலர்ந்த மாவினை சேர்த்து பிசையலாம். இதனால் மாவில் இருக்கும் காற்று வெளியேறிவிடும். பின்னர் மீண்டும் அரை மணி நேரம் ஊற வைக்கவும். மாவை தேய்த்தால் தானாக அது சுருங்குமளவு பதத்தில் மிருதுவாக இருக்க வேண்டும்.

அரை மணி நேரம் கழித்து, அவன் ட்ரேயில் மாவை போட்டு சமமாக கையிலேயே விரித்து விடவும். ஓரங்களில் விரலால் ஒரே மாதிரியாக அழுத்தி விடவும்.

பின் பீட்ஸா சோஸை தேவையான அளவு தடவி பின்னர் காய்கறிகளை ஒன்றின் பின் ஒன்றாக தூவவும்.

துருவிய சீஸை தேவையான அளவு பரப்பி விடவும். பின் சிறிது எண்ணெய்யை சீஸ் மேல் ஆங்காங்கே சேர்க்கவும். பின்னர் பீட்ஸாவின் ஓரங்களிலும் எண்ணெய் தடவி விடவும் இதனால் வேகும் போது கிறிஸ்பியாக இருக்கும்.

பின் ட்ரேவை எலக்ட்ரிக் அடுப்பின் மேல் ஸிம்மில் வைத்து சூடாக்கவும். ஃப்ளேம் கொண்ட அடுப்பு எனில் ஃபுல் ஃப்ளேமில் தோசை கல்லை வைத்து அதன் மேல் ட்ரேவை வைக்கவும். ட்ரே நன்கு சூடானதும் எடுத்து விடவும்.

பீட்ஸாவின் ஓரங்கள் பொன்னிறத்தில் மாறி, சீஸ் காய்கறிகளுடன் நன்கு கலந்திருக்கும் போது வெளியே எடுக்கவும். பீட்ஸா தாயராகி இருக்கும் உங்கள் முன்னிலையில்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg