Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முட்டையை இப்படியும் சமைக்கலாம்!

In
Updated: 12:32 GMT, Feb 3, 2018 | Published: 12:32 GMT, Feb 3, 2018 |
0 Comments
1077
This post was written by : Puvanes

முட்டை சிறியவர் தொடக்கம் பெரியவர் வரையிலும் விரும்பி உண்ணும் உணவு. இந்த முட்டை கொண்டு மசாலா தயார் செய்யும் முறையைப் பார்க்கலாம்.

சிறிதளவு எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, கராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்து அத்துடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.

வதக்கியதை ஆறவைத்து அத்துடன் நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக அரைத்து மீண்டும் சிறிது எண்ணெயில் சீரகம், கறிவேப்பிலை தாளித்து, வேக வைத்த முட்டையை கீறி விட்டு சேர்த்து கிளறவும். அத்துடன் அரைத்த விழுதினையும் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.

இந்தக் கலவையுடன் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும் க்ரேவி பதத்தில் கெட்டியானதும் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg