Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருநெல்வேலி அவ்வாவையும் பின்தள்ளும் வாழைப்பழ அல்வா செய்முறை!

In
Updated: 12:56 GMT, Feb 3, 2018 | Published: 12:56 GMT, Feb 3, 2018 |
0 Comments
1140
This post was written by : Puvanes

வாழைப்பழம் என்பது முக்கனிகளில் ஒன்று மாத்திரம் அல்ல கலாச்சாரத்தோடு பின்னிப்பிணைந்த பழம். இந்த பழத்தில் சத்துக்கள் ஏராளம் விலையும் குறைவு என்பதால் வாழை, ஏழைகள் முதல் அனைவரும் அன்றாடம் சுவைக்கும் கனிகளில் ஒன்று.

மறுபக்கம் அல்வா. அரேபிய மொழியில் இருந்து தமிழுக்கு வந்த சொல் அல்வா. அரேபிய மொழியில் அவ்லா என்பது இனிப்பு எனப் பொருள்படும். கோதுமையில் செய்யும் அல்வா பிரசித்தம். அதேபோல அல்வா என்றால் திருநெல்வேலி என்று பதில் கிடைக்கும் திருநெல்வேலி அல்வா சுவைக்காதவர்கள்கூட இதனை சொல்லுவார்கள்.

இந்த வாழைப்பழம், அல்வா இரண்டையும் சேர்த்து வாழைப்பழத்தில் அல்வா செய்தால்? செய்து பாருங்கள் திருநெல்வேலி அல்வாவும் இரண்டாவது இடம் சென்று விடும்.

வாழைப்பழத்தை தோல் உரித்து சிறு துண்டுகள் போட்டு, சிறிது நெய்யில் வதக்கி நன்றாக மசிக்கவும். இதில் சர்க்கரை, ஏலக்காய் தூள், கேசரிப் பவுடர் சேர்த்து நெய் விட்டு, முந்திரிப் பருப்பு போட்டு நன்றாக மீண்டும் கிளறி அல்வா பதம் வந்ததும் இறக்கவும். ஆறியதும் துண்டுகள் போட்டு எடுக்கவும் மணக்கும் வாழைப்பழ அல்வா தயார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg