Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈர்க்க வைக்கும் பெண்களின் அழகுக்காக சில குறிப்புகள்!

In
Updated: 13:34 GMT, Feb 3, 2018 | Published: 13:34 GMT, Feb 3, 2018 |
0 Comments
1061
This post was written by : Puvanes

பெண்களின் புருவம் அவர்களின் முக அழகை மேலும் சிறப்பாக காட்டுகின்றது. அழகிய புருவங்களைக் கொண்ட பெண்கள் தனி ஈர்ப்பைப் பெற்றிருப்பார்கள். வில்போன்ற புருவங்களைப் பெற்றுக் கொள்ள வாரம் ஒரு முறை பெண்கள் அழகு நிலையங்களை நாடுவதுண்டு.

பெண்களின் புருவ அழகு சங்க இலக்கியங்களில் இருந்து தொடர்ந்து வருகின்றது என்றால் அதன் சிறப்பை என்சொல்வது. “வேல் விழி கண்டு, ஆழிப்பேரலை என்னுள்” என்றான் ஒரு கவிஞன்.

இத்தகைய புருவம் உதிர்வதைத் தடுத்துக்கொள்ளவும், அடர்த்தியாக வளரவும் சில வழிமுறைகளைப்பார்க்கலாம். இதற்காக பழங்காலம் முதல் பெண்கள் பயன்படுத்தி வருவது விளக்கெண்ணெய். இது புருவ வேர்க்கால்களை புத்துணர்ச்சி அடையச் செய்து முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.

விளக்கெண்ணெயை புருவத்தில்தடவி. விரல் நுனியை கொண்டு 2 தொடக்கம் 3 நிமிடம் நன்றாக மசாஜ் செய்து, 30 நிமிடங்களின் பின்னர் வெது வெதுப்பான நீரில் கழுவவும். தினமும் ஒரு முறை இதனை பின்பற்ற புருவத்தில் ஏற்படும் மாற்றம் உங்கள் புருவங்களை உயரச் செய்யும்.

இரவு நேரத்தில் சில துளி தேங்காய் எண்ணெய்யை எடுத்து உங்கள் புருவத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளர்ச்சி அதிகரிக்கிறது.

ஒலிவ் எண்ணெய் சில துளிகள் எடுத்து புருவத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். இரவு முழுவதும் அப்படியே விடலாம் அல்லது 30 நிமிடங்கள் கழித்து கழுவலாம். ஒலிவ் எண்ணெயுடன் தேன் சேர்த்து புருவத்தில் தடவலாம். நன்றாக மசாஜ் செய்து 10 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவலாம். தினமும் இதனை செய்வதால் விரைவில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

பெண்களின் விழிகளே ஆயிரம் கதை பேசும் என்பர். அத்தகைய விழிகளை அழகாகக் காட்டும் புருவங்களுக்காக நிமிடங்களை செலவிடுவது ஒன்றும் தவறில்லையே…

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg