Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீடித்த இளமையைப் பெற்றுக்கொள்ளும் இரகசியங்கள்!

In
Updated: 13:41 GMT, Feb 3, 2018 | Published: 13:41 GMT, Feb 3, 2018 |
0 Comments
1113
This post was written by : Puvanes

முப்பதையும் தாண்டவில்லை அதற்குள் முதிர்தோற்றம் என்ற இந்தப் பிரச்சினை ஏராளமானவர்களுக்கு உண்டு. நீடித்த இளமையைப் பெற்றுக்கொள்ள பழங்காலத்தில் தவம் செய்து வரம் பெற்ற கதைகளும் உண்டு.

உண்மைதான் தவம் மூலம் நீடித்த இளமையெனும் வரம் கண்டிப்பாக கிடைக்கும் காரணம் மன அமைதி, ஒருநிலை. இந்த காலத்தில் தவம் எல்லாம் எட்டாக்கனி அதனால் மன அமைதியைத் தரும் தியானம் மூலம் நீடித்த இளமையைப் பெற்றுக்கொள்ளலாம்.

இள வயதிலேயே முதுமையான தோற்றம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம். இதற்கு தீர்வாக தியானம் அமைகின்றது. அது மட்டுமல்ல உடல்ரீதியான நோய்களுக்கும் தியானம் சிறந்த தீர்வு.

வேகமாக நகரும் காலத்தில் மன அழுத்தம் என்பதைத் தவிர்க்க முடியாது. எனினும் இதனைக் கட்டுப்படுத்திக் கொள்வது மிக அவசியம். தினமும் மனதில் நேர்மறையான எண்ணங்கள் உதயமாகுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு மாறான எண்ணங்கள் தோன்றினாலும் அதனை மெதுவாக மாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும். சுய பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் மனநிலையை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

உங்களை பற்றி நீங்களே மதிப்பீடு செய்து கொள்வதன் மூலம் சில மாற்றங்களை நிகழ்த்தலாம். நண்பர்கள் அல்லது உங்கள் நலனில் அக்கறை காட்டுபவர்களுடன் அமைதியான இரவு பொழுதில் மனம் விட்டு பேசலாம். அது மனதை சாந்தப்படுத்தும்.

கடினமான வேலைகளுக்கு பிறகு குளிர்ந்த நீரில் குளியல் போடலாம். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற துணைபுரியும். திசுக்களுக்கும் புத்துணர்ச்சி தரும்.

சாப்பிடும் உணவுகளை செரிமானம் அடைய செய்து உடலுக்கு தேவையான சத்துக்களை வடிகட்டும். குடலின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதற்கு உகந்த உணவுகளை சாப்பிட்டு வருவது நல்லது. தயிரை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உடலை வலுப்படுத்தும் பயிற்சிகளை வழக்கமாக செய்து வருவது நல்லது. நடைப்பயிற்சி உடலுக்கு பல நன்மைகளை தரும். தினமும் 10 நிமிடம் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். நல்ல உணர்வுகளை ஏற்படுத்தும் ஹோர்மோன்களை சுரக்கும்.

இவை எல்லாம் செய்யும் போது மனதிற்கு அமைதி கிடைக்கின்றது அந்த அமைதி உடலுக்கும், மனதிற்கும் வலுசேர்த்து நீடித்த இளமையை பரிசாகத் தருகின்றது. மரணத்தை தாண்டி, வென்று வாழ்வது சாத்தியமல்ல ஆனால் வாழும் காலத்தில் சிறப்பாக வாழ்ந்து மரணிப்பது அவசியமானதொன்று.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg