Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அழகிய கூந்தல் பெண்களுக்கு தனியழகு!

In
Updated: 13:48 GMT, Feb 3, 2018 | Published: 13:48 GMT, Feb 3, 2018 |
0 Comments
1104
This post was written by : Puvanes

பொதுவாக பெண்கள் அடர்த்தியான கூந்தலைப் பெற வேண்டும் என்பதில் அலாதி பிரியம் உடையவர்களாக இருப்பார்கள். ஆனால் தற்பொழுது வேலைப்பளு ஆகிய காரணத்தினால் கூந்தல் பராமரிப்பை சரியாக மேற்கொள்ள தவறிவிடுகின்றனர்.

பெண்களின் கூந்தல் இப்போது மட்டுமல்ல புராதன காலத்தில் இருந்து முக்கியத்துவம் பெற்று வரும் ஒன்று. “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்ற வாதம் உருவாக பெண் கூந்தலே காரணமாயிற்று என்றால் அந்த கூந்தலுக்கு உள்ள முக்கியத்துவம் பற்றிய மிகைப்படுத்தல் அவசியமில்லை.

கூந்தல் பராமரிப்புக்கென்று தனி அழகு நிலையங்கள் உண்டு. விதம் விதமான செம்பூக்களும், சோப்புகளும் சந்தையை நிறைத்துள்ளன. இவை அனைத்தையும் விட சில எளிய முறைகளைக் கையாண்டால் கூந்தல் கருமையானதாகவும், அடர்த்தியாகவும், மென்மையானதாகவும் மாறும்.

தலை கழுவும் பொழுது சம்போக்களை பாவிப்பவர்களாக இருப்பின் அதிக நேரம் உங்கள் மண்டை ஓட்டில் சம்போ ஊறாதவாறு பார்த்து கொள்ளுங்கள். இயற்கை அரப்பு கொண்டு கழுவுபவர்களுக்கு இந்தப் பயம் அவசியமில்லை.

வாழைப்பழத்தை அல்லது செம்பருத்தி இலையை பயன்படுத்தி பாருங்கள். இரண்டில் ஒன்றை எடுத்து நன்றாக அரைத்து முடியில் தடவி 5 நிமிடம் விட்டு கழுவுங்கள் கூந்தல் அழகு தானாகவே வரும்.

எண்ணெய் தேய்க்கும் பொழுது அவசரம் தேவையில்லை. தலைக்கு 15 நிமிடங்களாவது மசாஜ் கொடுத்து எண்ணெய் தேய்ப்பதனால் தலையில் உள்ள தசைகள் இலகி இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.

பொடுகு இருப்பவர்களுக்கு தலைமுடி உதிர்ந்து கொண்டே இருக்கும். எனவே பொடுகு தொல்லை நீங்க வேண்டும் என்றால் வேப்பம் இலையை அரைத்து தலை கழுவ முன்னர் தேய்த்து 10 நிமிடங்கள் விட்டு கழுவுங்கள். அல்லது துளசி இலையை அரைத்து தேய்த்து 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். பொடு தொல்லை நீங்கி முடி வளர ஆரம்பிக்கும்.

அழகியக் கூந்தலுக்கு உணவுப்பழக்கம் முக்கியம். இரும்பு சத்து நிறைந்த இலை வகைகளை உணவில்சேர்ப்பது தலை முடி வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்கும். முருக்கங்கீரை, வல்லாரை, பொன்னாங்கணி என்பவை முடி வளர்ச்சிக்கு சிறந்த கீரை வகைகள்.

விளம்பரங்களில் ஒப்பனைகளோடு காட்டப்படும் கூந்தலை நம்பி அதே வகையில் செயற்கை சாதனங்களைப் பயன்படுத்தி கூந்தலை பராமரிக்கச் சென்று வீணாக்கிக்கொள்ளாமல் எளிய முறைகளைப் பயன்படுத்தி கூந்தலை பராமரித்துக் கொள்ளுவது பெண்களுக்கு முக்கியம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg