Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெண்களின் அழகை மெருகூட்டுவது எது?

In
Updated: 14:00 GMT, Feb 3, 2018 | Published: 14:00 GMT, Feb 3, 2018 |
0 Comments
1136
This post was written by : Puvanes

பெண்கள் சிறப்பான உடல் அம்சத்தையும், அழகிய தோற்றத்தையும் பளபளப்பினையும் கொண்டிருந்தாலும் அவர்களின் அழகை எடுப்பாகக் காட்டுவது அவர்கள் தேர்வு செய்யும் ஆடைகளே.

என்னதான் அழகைப் பெற்றிருந்தாலும் உடலுக்கு ஏற்ற ஆடைகளை தேர்வு செய்யாவிட்டால் அழகு அடங்கிப்போய்விடும். அதற்காகவே நாகரீகத்தை நாடும் பெண்கள் ஆடைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். பெண்கள் உடைத் தேர்வுக்கு சென்றால் நாட்களும் கடந்துவிடும் என்ற கூற்று இதனாலேயே ஏற்பட்டது எனலாம்.

எந்த ஆடை தனக்கு சரியானதான இருக்கும் என்ற குழப்பம் பெண்களுக்கு இயல்பாகவே ஏற்படும். இதற்கு சில தீர்வுகளை தருகின்றோம்.

உயரமாகவும், ஒல்லியாகவும் உள்ள பெண்கள் குறுக்கே கோடுகள் போட்ட உடைகளையோ அல்லது பெரிய வேலைப்பாடுகள் (டிசைன்கள்) உள்ள ஆடைகளையோ அல்லது பெரிய கரைகள் உள்ள உடைகளை அணிந்ததால் எடுப்பாக இருக்கும். உடல் மேனிக்கு ஏற்ற பொருத்தமான நிறங்களைத் தேர்வு செய்வதும் முக்கியம்.

அதேபோல குண்டாக உள்ள பெண்கள் சிறிய வேலைப்பாடுகள் உள்ள உடைகளையும், சிறிய கோடுகள் போட்ட உடைகளையும், அகலம் குறைவாக உள்ள கரைகள் போட்ட உடைகள் அணியும் போது அவர்களில் உடல் எடை (குண்டு) வெளியே தெரியாது பார்ப்பதற்கு ஒல்லியானவர்களைப் போன்ற தோற்றத்தைத் தரும்.

நிறங்களைப் பொருத்தவரையிலும் சிவப்பாக இருக்கும் பெண்களுக்கு கடுமையான (டார்க்) நிற ஆடைகளையும், கருமையானவர்கள் பெண்களுக்கு மென் நிற ஆடைகளும் பொருத்தமாக இருக்கும் என்பதே பொதுவாக கருத்து. எனினும் இது தவறு இவ்வாறான அழகு தென்படுவது அவர்கள் மேனி வடிவமைப்பொருத்தே தவிர அந்த நிறங்களால் அல்ல. மென் நிறங்களை கருமையான பெண்கள் அணியும் போது அவர்கள் மேலும் கருமையாகவே தெரிவார்கள்.

என்றாலும் சிவப்பாக இருக்கும் பெண்கள் மெல்லிய நிற ஆடைகளை அணிந்தால் மேலும் அழகாகத் தோற்றமளிப்பார்கள். கருப்பான பெண்களுக்கு அதிக மெல்லிய நிறமும், அதிக கடும் நிறமும் இல்லாமல் நடுத்தரமான நிறங்கள் தான் பொருத்தமானது.

அதேபோன்று உடல் வாகுக்கு ஏற்ற ஆடைகளைத் தேர்வு செய்வதும் முக்கியம். ஆடை விற்பனை நிலையங்களில் காட்சிக்காக வைக்கப்படும் ஆடைகள் பார்க்க அழகாகத் தெரியும் என்றாலும் அதனையே அதிக ஒல்லியான, அல்லது குண்டான பெண்கள் தனக்கும் அழகாக இருக்கும் எனத் தேர்வு செய்து கொள்வது தவறு. தனது உடல் அம்சத்திற்கு ஏற்ற நிற, உயர, குட்டை ஆடைகளைத் தேர்வு செய்து கொள்வதே சிறந்ததது.

Tags:


toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg