Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அனைத்தும் அவன் சித்தம்! – துரியோதனனும், அமாவாசையும்

In
Updated: 14:08 GMT, Feb 3, 2018 | Published: 14:08 GMT, Feb 3, 2018 |
0 Comments
1241
This post was written by : Puvanes

உலகில் அதர்மங்களை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பகவான் பல லீலைகளைப் புரிந்துள்ளார். காரணம் இன்றி அவர் எதுவும் செய்ய மாட்டார் அதேபோல அனைத்திற்கும் அவரே காரணமாகின்றார்.

உதாரணமாக பாண்டவர்கள் என்னதான் வீரம் மிக்கவர்களாக இருந்தாலும், தர்மவழியில் நின்றவர்கள் என்றாலும் பகவான் ஸ்ரீ கிருஷ்னனின் தலையீடு இல்லாமல் குருஷேத்திர போரில் பாண்டவர்களால் வென்றிருக்க முடியாது.

கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஒரு மாபெரும் போரை உருவாக்கியவரே கிருஷ்ணனே என்பது அனைவரும் அறிந்த கதைதான். அதேபோல பாண்டவர்களுக்கு வெற்றியைத் தீர்மானித்ததும் கிருஷ்ணனே அந்த கதை பல தத்துவங்களைக் கூறுகின்றது.

பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் போர் நிச்சயிக்கப்பட்டுவிட்டது எனினும் யார் முதலில் போரை ஆரம்பிப்பது என்ற கேள்வி தொக்கு நிற்கின்றது. இந்த இடத்தில் துரியோதனன் கிரகநிலைகளை ஆராய்ந்து அதன்படி போரை ஆரம்பிக்க திட்டமிடுகின்றான்.

அதன்படி சோதிட சாத்திரக் கலையை கற்ற வித்தகனும் கிரகங்களின் நிலையை கணித்துக் கூறுவதில் வல்லவனுமான சகாதேவனிடம் “எப்போது போரைத் தொடங்கினால் வெற்றி தனக்கு கிடைக்கும்” என்பதை அறிந்து கொள்வதற்காக துரியோதனன் செல்கின்றான்.

தன்னிடம் சோதிடம் கேட்க வந்திருப்பவன் தமது எதிரி என்றாலும் நீதியின்பால் நடக்கும் சகாதேவன் முறையாக கிரகங்களைக் கணிக்கின்றான். தீர்க்கதரியான சகாதேவன் “அடுத்த அமாவாசையில் போர் தொடங்கினால் உங்களுக்கு வெற்றி உறுதி” எனக் கூறுகின்றான்.

அவன் கூற்று பொய்ப்பதில்லை. அதனால் அமாவாசையை போர் ஆரம்பநாளாக கங்கணம் கட்டிக்கொண்ட துரியோதனன் வெற்றியை எண்ணி ஆனந்தப்பட்டுக்கொண்டே அவ்விடம் விட்டு நகர்கின்றான்.

இந்த விடயம் கிருஷ்ணன் காதுகளுக்கும் செல்கின்றது. எப்படியும் சகாதேவன் கூறிய தினத்தில் யுத்தம் ஆரம்பமானால் பாண்டவர்கள் தோல்வி உறுதி என்பதையும் கண்ணன் அறிந்து கொள்கின்றார்.

இந்த சிக்கலில் இருந்து மீண்டுவரவும், பாண்டவர்கள் குருஷேத்திரபோரில் வெற்றி பெறவும் சூழ்ச்சி செய்கின்றார் கிருஷ்ணன். அதற்காக சாதூர்யமான திட்டம் ஒன்றினை வகுக்கின்றான்.

அமாவாசை தினத்திற்கு முதல்நாள் பாண்டவர்களை அழைத்துக்கொண்டு கிருஷ்ணன் பித்ருக்களுக்கு திதிகொடுக்கும் நதிக்கரைக்குச் செல்கின்றார். அனைத்தும் கிருஷ்ணனின் ஏற்பாடுபடியே நடக்கின்றது. பாண்டவர்களும் திதிகொடுக்க ஆயத்தமாகின்றார்கள்.

அப்போது அந்த இடத்திற்கு சூரியனும், சந்திரனும் குழப்பத்தோடு வருகின்றனர். “அமாவாசையோ நாளை!! இன்றே திதிகொடுப்பது ஏனோ??” என அவர்கள் கிருஷ்ணனிடம் கேள்வியை முன்வைக்கின்றனர். அதற்கு “சூரிய, சந்திரரே உங்கள் சந்தேகத்திற்கு போதாயன மகரிஷியே பதில் அளிப்பார் என கிருஷ்ணன் கூற கேள்வி மகரிஷியின் பக்கம் திரும்புகின்றது.

சூரிய சந்திரனின் கேள்விக்கு பதில் கூற முன்வந்த மகரிஷி “அமாவாசை தினத்தில் நீங்கள் எங்கே இருப்பீர்கள் என்ற பதில்கேள்வியை மகரிஷி முன்வைக்கின்றார். அந்தக் கேள்விக்கு “அமாவாசை தினத்தில் நாம் இருவரும் அருகருகே இருப்போம் என சூரிய சந்திரர் .இணைந்து மறுமொழி கூறுகின்றனர்.

தொடர்ந்த மகரிஷி “இப்போது நீங்கள் இருவரும் அருகருகே தானே இருக்கின்றீர்கள் அதனால் இன்று தானே அமாவாசை என பதில் கூற, சூரிய சந்திரர்கள் திணறிப்போய் நிற்கின்றனர்.

அதேசமயம் இந்த நாடகத்தின் உள்சூது அறியாத துரியோதனன் அமாவாசை தினத்திற்கு முதல்நாளை அமாவாசை எனக்கருதி போரை ஆரப்பிக்கின்றான், போரில் தோல்வியடைந்து வீழ்கின்றான்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg