Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்: 11 படை வீரர்கள் உயிரிழப்பு

In உலகம்
Updated: 06:01 GMT, Feb 4, 2018 | Published: 06:01 GMT, Feb 4, 2018 |
0 Comments
1172
This post was written by : Suganthini

பாகிஸ்தானின் சுவாட் (Swat) மாவட்டத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில், படை வீரர்கள் 11 பேர் உயிரிழந்ததுடன், 13 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி மாவட்டத்திலுள்ள ராணுவத்துக்குச் சொந்தமான விளையாட்டு முகாமில் நேற்று (சனிக்கிழமை) மாலை தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றது.

படை வீரர்கள் கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தபோதே, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. விளையாட்டு மைதானத்தினுள் திடீரென்று நுழைந்த தற்கொலைதாரி குண்டை வெடிக்க வைத்ததாகவும், இதன்போது, படை வீரர்கள் 11 பேர் உயிரிழந்ததுடன், 13 பேர் படுகாயமடைந்ததாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள டெஹ்ரெக் ஈ தலிபான் எனும் பயங்கரவாத அமைப்பு, இன்னும் பல தாக்குதல்களுக்காக இஸ்லாமாபாத் காத்திருக்க வேண்டுமெனவும், அச்சுறுத்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg