Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பனிப்போர் மனப்பான்மையைக் கைவிட அமெரிக்காவுக்கு வலியுறுத்து

In
Updated: 12:21 GMT, Feb 4, 2018 | Published: 12:21 GMT, Feb 4, 2018 |
0 Comments
1159
This post was written by : Suganthini

அணுவாயுதத்திட்டம் தொடர்பாக, அமெரிக்கா தனது பனிப்போர் மனப்பான்மையைக் கைவிட வேண்டுமென, சீனா வலியுறுத்தியுள்ளது.

சிறியளவிலான அணுக் குண்டுகளைத் தயாரிப்பது தொடர்பான அமெரிக்காவின் திட்டத்தைத் தொடர்ந்தே, சீனா இன்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு வலியுறுத்தியுள்ளது.

அணுவாயுத விவகாரம் தொர்பாக, அணுசக்தி ஆய்வுநிலை மதிப்பீடு எனும் பென்டகன் கொள்கை ஆவணம் தெரிவித்துள்ள கருத்தை தாம் எதிர்ப்பதாகவும், சீனா கூறியுள்ளது.

அணுவாயுதத்திட்டம் தொடர்பாக வடகொரியா, ரஷ்யா, ஈரான், சீனா ஆகிய நாடுகள் அச்சுறுத்தலாகக் காணப்படுவதாக அமெரிக்கா கருதி வருகின்றது.

அத்துடன், ரஷ்யாவின் அணுவாயுத வளர்ச்சியையிட்டு கவலை வெளியிட்ட அமெரிக்கா, ரஷ்யாவை எதிர்த்து நிற்க எண்ணியுள்ள நிலையில், அணுவாயுதத் திறன்களை விரிவுபடுத்தவும் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் அணுவாயுதப் பயன்பாட்;டைத் தடைசெய்யும் நோக்கில், சிறியளவிலான அணுக் குண்டுகளைத் தயாரிப்பது தொடர்பாக, அமெரிக்க ராணுவத்தினர் ஆலோசனை முன்வைத்தனர்.

இந்த நடவடிக்கைக்கு ரஷ்யா தனது கண்டனத்தை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg