Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரிமீயர் லீக் கால்பந்து போட்டியில் 69 புள்ளிகளுடன் மான்செஸ்டர் சிட்டி அணி முன்னிலை

In உதைப்பந்தாட்டம்
Updated: 12:41 GMT, Feb 4, 2018 | Published: 12:39 GMT, Feb 4, 2018 |
0 Comments
1192
This post was written by : Thavarajasingam Breesnove

பிரிமீயர் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணியை பர்ன்லே அணியை எதிர்கொண்டு 1-1 என சமநிலையில் பெற்றது. இப்போட்டி மான்செஸ்டர் சிட்டி அணியின் சொந்த மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

ஆட்டத்தின் 22 ஆவது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டியின் டேனிலோ முதல் கோலை பதிவு செய்தார். மறுபடியும் 82ஆவது நிமிடத்தில் பர்ன்லே அணியின் ஜோகன் பெர்க் கட்முன்ட்சன் கோல் அடித்தார்.

இதனால் 1-1 என சமநிலையில் இருந்தது. அதன்பின் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. ஆகவே ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது. மற்றொரு ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் தனது சொந்த மைதானத்தில் ஹட்டர்ஸ்பீல்டு டவுன் அணியை எதிர்கொண்டு 2-0 என வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மான்செஸ்டர் யுனைடெட் 26 போட்டிகள் முடிவில் 56 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது.  மான்செஸ்டர் சிட்டி 69 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

சமநிலை செய்ததால் மான்செஸ்டர் சிட்டி அணி மேலும் இரண்டு புள்ளிகள் பெறும் வாய்ப்பை இழந்தது.  தொடர்ந்தும் 13 போட்டிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg