Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அனைவரும் தாய்நாட்டைக் கட்டியெழுப்ப திடசங்கற்பம் கொள்ள வேண்டும் – கிழக்கு மாகாண ஆளுநர்

In இலங்கை
Updated: 16:01 GMT, Feb 4, 2018 | Published: 15:42 GMT, Feb 4, 2018 |
0 Comments
1143
This post was written by : Litharsan

அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் தாய் நாட்டைக் கட்டியெழுப்ப திடசங்கற்பம் கொண்டு செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம தெரிவித்துள்ளார்.

70ஆவது சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வுகள் திருகோணமலை மாவட்டத்தில் ரோஹித போகல்லாகமவின் தலைமையில் நடைபெற்றது.  பிரட்ரிக்கோட்டை கடற்கரைப் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற  இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ‘எமக்குப் பின்னர் சுதந்திமடைந்த பல நாடுகள் எம்மைப் பின்தள்ளி பல துறைகளில் முன்னேற்றமடைந்து காணப்படுகின்றன. எனவே அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் தாய் நாட்டைக் கட்டியெழுப்ப திடசங்கற்பங்கொண்டு செயற்படவேண்டும்.

இதற்கு முந்தைய காலங்களில் கொண்டாடப்பட்ட சுதந்திர தினத்திற்கும் இன்று கொண்டாடப்படுகின்ற சுதந்திர தினத்திற்கும் பல வேறுபாடுகள் காணப்படுகின்றது. இன்று ஜனநாயகம் ஒரு வலுவான நிலையில் காணப்படுகின்றது. அதனைவிட ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் பல அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவது பெரும் திருப்புமுனையாகவுள்ளது.

மேலும், உலகிற்கு ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வெளிக்கொணர்கின்ற ஒரு மாகாணமாக கிழக்கு மாகாணம் காணப்படுகின்றது. இவ்வருடம் பல அபிவிருத்தி திட்டங்கள் கிழக்கு மாகாணத்தில் அமுலாக்கப்படவுள்ளது. கடந்த வருடத்தைப் போல் இவ்வருடமும் பட்டதாரி நியமனம் வழங்கப்படவுள்ளது’ என்று ரோஹித போகல்லாகம மேலும்  தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg