Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒலிம்பிக்போட்டி: தென்கொரியாவுக்கு வடகொரிய அதிகாரி விஜயம்

In உலகம்
Published: 04:58 GMT, Feb 5, 2018 |
0 Comments
1071
This post was written by : Suganthini
north

குளிர்கால ஒலிம்பிக் போட்டியின்போது, இரு கொரியாக்களுக்கிடையில் காணப்படும் பதற்றத்தைக் குறைக்கும் வகையில், பல வருடங்களின் பின்னர், உயர்மட்ட அதிகாரியொருவரை தென்கொரியாவுக்கு வடகொரியா அனுப்பவுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடகொரியாவின் விழாக் குழுத் தலைவரான கிம் யொங் நாம், 22 உறுப்பினர்களைக் கொண்ட குழுவுக்குத் தலைமை வகித்து, தென்கொரியாவுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை பயணிக்கவுள்ளதாக, தென்கொரிய ஒருமைப்பாடு அமைச்சு தெரிவித்துள்ளது.

வடகொரிய நாடாளுமன்றத் தலைவரான கிம் யொங் நாம், சுமார் 4 வருடங்களின் பின்னர், தென்கொரியாவுக்குச் செல்லும் உயர்மட்ட அதிகாரியாவார்.  இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் இரு கொரியாக்களையும் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், ஒரே கொடியின் கீழ் அணிவகுத்துச் செல்லவுள்ளதாகவும், சர்வதேச ஊடகம் கூறியுள்ளது.

வடகொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் அணுவாயுதச் சோதனைகள் காரணமாக, சர்வதேச நாடுகளின் அழுத்தத்தையும், பொருளாதாரத்தடைகளையும் வடகொரியா எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில், குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா கலந்துகொள்வது, அதன் ராஜதந்திர நடவடிக்கையாக அவதானிக்கப்படுகின்றமை. குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)