Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவில் ரயில் விபத்து: இருவர் உயிரிழப்பு

In
Updated: 06:03 GMT, Feb 5, 2018 | Published: 06:03 GMT, Feb 5, 2018 |
0 Comments
1214
This post was written by : Suganthini

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில், இருவர் உயிரிழந்ததுடன், 116 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டதாக, அம்மாகாண ஆளுநர் ஹென்றி மெக்மாஸ்டர் ( Henry McMaster) தெரிவித்துள்ளார்.

பயணிகள் ரயிலொன்றும் சரக்கு ரயிலொன்றுமே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விபத்துக்குள்ளானது. இதன்போது, இருவர் உயிரிழந்ததுடன், 116 பேர் படுகாயமடைந்தனர். ரயில் பணியாளர்கள் இருவரே உயிரிழந்தனர்.

139 பயணிகள் மற்றும் 8 ரயில் பணியாளர்களுடன் நியூயோர்க்கிலிருந்து மியாமி நோக்கிப் பயணித்த ஆம்ராக் (Amtrak) பயணிகள் ரயில், தவறான தண்டவாளத்தில் பயணித்தமையாலேயே, விபத்துச் சம்பவித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், இது தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg