Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரொனால்டோ இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார்?

In உதைப்பந்தாட்டம்
Updated: 11:14 GMT, Feb 5, 2018 | Published: 06:58 GMT, Feb 5, 2018 |
0 Comments
1191
This post was written by : Thavarajasingam Breesnove

தனது 33ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார் என்பது ரசிகர்கள் முன்பாக உள்ள கேள்வியாகும்.

கழக மட்டத்தில் வெல்லக்கூடிய அனைத்து சம்பியன் பட்டங்களையும் வென்றெடுத்துள்ள ரொனால்டோ 2016இல் போர்த்துக்கல் தேசிய அணி ஐரோப்பிய சம்பியன் கிண்ணத்தை வென்றெடுப்பதில் முக்கிய பங்காற்றியிருந்தவர்.

இவ்வாண்டில் ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்தாட்டப்போட்டிகளில் தாயக அணியை முதன்முறையாக சம்பியன் ஸ்தானத்திற்கு வழிநடத்துவார் என்ற எதிர்பார்ப்பு, போர்த்துக்கேய மக்களுக்கு மட்டுமன்றி உலகின் பலபாகங்களிலும் பரந்துவாழும் அவரது ரசிகர்களுக்கும் உள்ளது.

போர்த்துக்கல் நாட்டின் தேசிய கால்பந்து அணிக்கும். ஸ்பேயின் நாட்டின் ரியல் மேட்ரிட் அணிக்கும் எழாவது இலக்க வீரராக விளையாடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

1985ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதி போர்த்துக்கல்  நாட்டில் மதீரா நகரில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர்.

இவரது தந்தை சாதாரண சமையல்காரர். இவரது தாய் நகராட்சி ஒன்றில் பூங்காக்களை பராமரிக்கும் வேலையில் இருந்தார்.  ஏழை குடும்பத்தில் பிறந்தாலும், தனது கால்பந்து திறமையால் உலகிலேயே கால்பந்து மூலம் அதிகம் சம்பாதிக்கும் வீரன் ஆனார்.

இவரது 2017 ஆண்டு வருமானம் சுமார் 93 மில்லியன் அமெரிக்க டெலர்கள் ஆகும். தனது ஆரம்ப காலங்களில் அன்டோரின்கா என்ற கழகத்திற்காக விளையாடிய ரொனால்டோ 1997 இல் நிசியோனல் என்ற கழகத்திற்கு மாறினார்.

அதன் பின் ஸ்போர்ரின் சிபி என்ற கழகத்தில் விளையாடும் பொழுது மன்செஸ்ரர் அணியின் நிர்வாகியான அலெகடஸ் பெர்கஸனால்  இனங்காணப்பட்டார். 18 வயதே நிரம்பிய இவரை 12.24 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களுக்கு மன்செஸ்ரறில் விளையாடுவதற்காக ஒப்பந்தமிடப்பட்டார்.

பின்பு 2004 இல் முதன் முதலாக போர்த்துக்கல் தேசிய கால்பந்து அணிக்காக விளையாடி சர்வதேச கல்பந்து ரசிகர்களுக்கு அறிமுகமானார். இப்பொழுது விளையாடிவரும் கால்பந்து வீரர்களிலேயே ஒரு கழகத்திற்காக அதிகம் விலைகொடுத்து வாங்கப்பட்ட ஒரே வீரர் இவராவார்.

இவர் மான்செஸ்ரர் யுனைட்டட் கழகத்திலிருந்து றியல் மட்றிட் அணிக்காக மாறிவந்த பொழுது இவருக்காக ஏலம் விட்ட தொகை சுமார் 132 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் பலோன் டி.ஆர் விருதை இவர் ஐந்தாவது முறை பெற்றிருக்கின்றார்.

2017ஆம் ஆண்டு ஐரோப்பிய கழக அணிகளுக்கு இடையே நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ரொனால்டோவின் ‘பை சைக்கிள் கிக்’ கோலால் ரியல் மேட்ரிட் அணி, 12ஆவது முறையாக சம்பியன் பட்டம் வென்றது. அதேநேரம் 12 கோல்கள் அடித்த ரொனால்டோ அதிக கோல்கள் அடித்த வீரராக தேர்வு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg