Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்னாபிரிக்க ஜனாதிபதி ஷுமாவை பதவி விலக வலியுறுத்து

In
Updated: 07:05 GMT, Feb 5, 2018 | Published: 07:05 GMT, Feb 5, 2018 |
0 Comments
1177
This post was written by : Suganthini

தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜகோப் ஷுமா, ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலகுவதற்கு அழுத்தம் காணப்படுவதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவின் ஆளும் கட்சியான ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸின் (ஏ.என்.சி.) சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, இந்த அழுத்தம் காணப்படுவதாகவும், அந்த ஊடகம் கூறியுள்ளது.

இருப்பினும், பதவியிலிருந்து விலகுவதற்கு ஜகோப் ஷுமா மறுத்துள்ளதாக, ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸின் முன்னாள் உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஜுலியஸ மலிமா  டுவீட்டரில் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவில் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்வரை, ஜனாதிபதிப் பதவியிலிருந்து ஜகோப் ஷுமா, பதவி விலகப் போவதில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள ஜகோப் ஷுமா, ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸின் தலைவர் பதவியிலிருந்து கடந்த டிசெம்பரில் நீக்கப்பட்டதுடன், கட்சியின் தலைவர் பதவிக்கு தென்னாபிரிக்காவின் துணை ஜனாதிபதி சிரில் ரமபோசா நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தென்னாபிரிக்காவின் துணை ஜனாதிபதியாகப் பதவி வகித்துவரும் சிரில் ரமபோசா, எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் ஜனாதிபதியாவதற்கு பலமான வாய்ப்புக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg