Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தலுக்கு பின்னர் அழுத்தம் அதிகரிக்கும்! – சம்பந்தன்

In இலங்கை
Updated: 08:17 GMT, Feb 5, 2018 | Published: 08:17 GMT, Feb 5, 2018 |
0 Comments
1266
This post was written by : Varshini

”பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களை இலங்கை அரசாங்கம் செயற்படுத்த வேண்டுமென முன்னொருபோதும் இல்லாத வகையில் இலங்கை அரசாங்கத்தின் மீது சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்து வருகின்றது. தேர்தலுக்கு பின்னர் இந்த அழுத்தம் அதிகரிக்கும். ஆகவே இத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மூதூர் இருதயபுரம் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றிலேயே சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பெப்ரவரி தேர்தல் மிக முக்கியமானதென அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்ததை சம்பந்தன் இதன்போது சுட்டிக்காட்டினார். ஒற்றையாட்சியா அல்லது தமிழீழம் மலரவேண்டுமா என்ற தீர்மானம் எடுக்கப்படும் என்பதையே மஹிந்த குறிப்பிட்டுள்ளார் என சம்பந்தன் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும் தமிழீழத்தை இப்போது கேட்கவில்லையென குறிப்பிட்ட சம்பந்தன், ஒற்றையாட்சியையும் ஒருபோதும் ஏற்கமாட்டோம் என தெளிவாகக் குறிப்பிட்டார்.

13ஆம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டாலும் அது முழுமையாக அமையவில்லை. இந்நிலையில், அதிகாரங்கள் முழுமையாக பகிரப்படுவதோடு, பொறுப்புக்கூறல், நிகழ்ந்த விடயங்கள் மீள நிகழாமை மற்றும் நிரந்தர அரசியல் தீர்வு கிடைப்பதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டுமென சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.

இவற்றை செயற்படுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதோடு, சர்வதேச அழுத்தமும் காணப்படுவதாக சம்பந்தன் குறிப்பிட்டார். இந்நிலையில், இத்தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறு வாக்களிப்போகின்றார்கள் என்பதை ஆட்சியாளர்களும் சர்வதேச சமூகமும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக சம்பந்தன் மேலும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg