Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்செஸ்டர் வைத்தியசாலையில் அறுவைச் சிகிச்சைகள் ரத்து

In
Updated: 08:23 GMT, Feb 5, 2018 | Published: 08:23 GMT, Feb 5, 2018 |
0 Comments
1061
This post was written by : Suganthini

மன்செஸ்டர் வைத்தியசாலைக்கான நீர்விநியோகத்தில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக, அவ்வைத்தியசாலையில் இன்று (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்படவிருந்த அறுவைச் சிகிச்சைகள் பல, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, அவ்வைத்தியசாலையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், புற்றுநோய்க்கான சிகிச்சை மற்றும் அவசர அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுமெனவும், மன்செஸ்டர் வைத்தியசாலை நிர்வாகம் கூறியுள்ளது.

மேலும், தடைசெய்யப்பட்டுள்ள அறுவைச் சிகிச்சைகளுக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படுமென்பதுடன், அவசர சிகிச்சை பெற்றுக்கொள்ளும் நோயாளிகள் மாத்திரம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு வருகை தருமாறும், வைத்தியசாலை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

நீர்விநியோகத் தடங்கலை சீர்செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வைத்தியசாலை நிர்வாகம் கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg