Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐக்கிய தேசிய கட்சியில் மேலும் ஒருவர் இணைவு

In இலங்கை
Updated: 10:03 GMT, Feb 5, 2018 | Published: 08:39 GMT, Feb 5, 2018 |
0 Comments
1493
This post was written by : poovannan

வவுனியாவில் அகில இலங்கை தமிழர் மகாசபையின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஓருவர் ஐக்கிய தேசியக் கட்சியுன் இணைந்து கொண்டார்.

இது குறித்து வவுனியாவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா நகரசபை வட்டார இலக்கம் 06 இல் போட்டியிடும் திவர்சனா செல்வகுமார் என்பவரே இவ்வாறு இணைந்து கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில், அகில இலங்கை தமிழர் மகாசபையிடம் சரியான ஒழுங்குபடுத்தல் திட்டங்கள் எதுவும் இல்லாமையினால் அக்கட்சியில் இருந்து விலகியதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் வவுனியா நகரசபை வட்டார இலக்கம் 06 இல் போட்டியிடும் தம்பாபிள்ளை பிறமேந்திரராஜா என்பவருக்கு ஆதரவாக செயற்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் இணை ஓருங்கிணைப்பாளர் தம்பாபிள்ளை பிறமேந்திரராஜா மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg