Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் வசதியின்மை: சிகிச்சை அளிக்க வைத்தியர்கள் மறுப்பு

In
Updated: 09:14 GMT, Feb 5, 2018 | Published: 09:14 GMT, Feb 5, 2018 |
0 Comments
1208
This post was written by : Suganthini

பிரித்தானியாவிலுள்ள பெரும்பாலான வைத்தியசாலைகளின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான படுக்கை வசதிகள் குறைவாகக் காணப்படுகின்றது. இந்நிலையில், ஆபத்தான நோய்களின் பிடியில் சிக்கியுள்ள நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சைகளைச்  செய்ய வைத்தியர்கள் மறுத்து வருவதாக, சர்வதேச ஊடகமொன்று இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது.

வைத்தியசாலைகளின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்குத் தேவையான படுக்கை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க தேசிய சுகாதார சேவை தவறியுள்ளதாக, வைத்தியசாலை அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் காணப்படும் படுக்கை வசதிக் குறைபாடு காரணமாக, அவசர அறுவைச் சிகிச்சைகளைச் செய்ய வைத்தியர்கள் தவிர்த்து வருகின்றனர்.

புற்றுநோய், இதயநோய் உட்பட உயிருக்கு ஆபத்தான நோய்களின் பிடியில் சிக்கியுள்ள நோயாளர்களுக்கு அறுவைச் சிகிச்சைகளைச் செய்வதை தாமதிக்க வேண்டாமென்று, தேசிய சுகாதார சேவை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், வைத்தியசாலைகளில் அறுவைச் சிகிச்சைகள் தவிர்க்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, ஆபத்தான நோய்களின் பிடியிலுள்ள நோயாளர்களுக்கு அறுவைச் சிகிச்சைகளைச் செய்யத் தவறும் பட்சத்தில், புற்றுநோய் மற்றும் இதயநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்புகளை எதிர்நோக்க நேரிடுமென, பிரித்தானியாவின் நோயாளர்கள்  சங்கம் மற்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg