Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்பெய்னில் பனிப்பொழிவு: அநாவசிய பயணங்களைத் தவிர்க்க வலியுறுத்து

In
Updated: 09:35 GMT, Feb 5, 2018 | Published: 09:35 GMT, Feb 5, 2018 |
0 Comments
1139
This post was written by : Suganthini

ஸ்பெய்னில் காணப்படும் கடுமையான பனிப்பொழிவைத் தொடர்ந்து, அநாவசியப் பயணங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு வாகனச் சாரதிகளிடம், ஸ்பெய்ன் சிவில் பாதுகாப்பு முகரவக அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஸ்பெய்னில் இன்றும் (திங்கட்கிழமை) கடுமையான பனிப்பொழிவு காணப்படுமென்று, அந்நாட்டு வானிலை நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

ஸ்பெய்னில் நேற்று காணப்பட்ட கடுமையான பனிப்பொழிவு காரணமாக, வாகனங்கள் போக்குவரத்தில் இடையூறை எதிர்நோக்கியிருந்தன.

பல வீதிகளில் பனிக்கட்டிகள் உறைந்துள்ளதால், வாகனங்கள் சறுக்கி விபத்துகள் சம்பவிக்கும் நிலைமை ஏற்படலாமென்பதுடன், வாகனங்களும் போக்குவரத்து நெருக்கடிக்கு உள்ளாகலாம்.

எனவே, அநாவசியப் பயணங்களைத் தவிர்த்துக்கொள்ள வேண்டுமெனவும், ஸ்பெய்ன் சிவில் பாதுகாப்பு முகவரக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg