Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வத்திக்கானுக்கு துருக்கிய ஜனாதிபதி விஜயம்

In
Updated: 09:58 GMT, Feb 5, 2018 | Published: 09:58 GMT, Feb 5, 2018 |
0 Comments
1125
This post was written by : Suganthini

வத்திக்கானுக்கு, துருக்கிய ஜனாதிபதி ரெஸிப் தையிப் ஏர்டோகன் விஜயம் செய்துள்ள நிலையில், ஜெருசலேம் விவகாரம் தொடர்பாகக் கவனம் செலுத்தியுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

வத்திக்கானுக்கு  விஜயம் செய்துள்ள துருக்கிய ஜனாதிபதி, பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸை இன்று (திங்கட்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.  இதன்போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஒருதலைப்பட்ச ஜெருசலேம் அறிவிப்புத் தொடர்பாக இவர்கள் இருவரும் கலந்துரையாடியுள்ளதாகவும்,  சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

புனித நகரான ஜெருசலேமை தமது தலைநகரென்று இஸ்ரேலும், கிழக்கு ஜெருசலேம் தமது தலைநகரென்று பலஸ்தீனமும் கூறிவரும் நிலையில், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த டிசெம்பர் 6ஆம் திகதி   ஒருதலைப்பட்சமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg