Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

30 ஆவது பிறந்த நாளை கொண்டாட இலங்கை வரும் கனடா பெண்

In கனடா
Updated: 12:00 GMT, Feb 14, 2018 | Published: 11:20 GMT, Feb 14, 2018 |
0 Comments
1126
This post was written by : Thavarajasingam Breesnove

இலங்கையில் இருந்து கனடா தம்பதியினரால் 1988ஆம் ஆண்டு தத்தெடுக்கப்பட்ட குழந்தை(Rhodes), தற்போது தனது 30 ஆவது பிறந்த தினத்தினை கொண்டாடுவதற்கு இலங்கை வருகைதரவுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில், கனடா ஊடகம் ஒன்று தகவல் வெளியிடுகையிலே, இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்(Rhodes) தற்போது கனடாவின் Calgary பகுதியில் பதிவு செய்யப்பட்ட ஒரு தாதியாக பணியாற்றுகிறார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற 1988ஆம் ஆண்டு சுற்றுலாவுக்காக வருகைதந்திருந்த Mark மற்றும் Gail Rhodes தம்பதியினால் 4 மாத குழந்தையாக(Rhodes) தத்தெடுக்கப்பட்டார்.

தற்போது அவர் முதல் முறையாக தனது பிறந்த நாட்டிற்கு திரும்பவுள்ளார். தன்னை வளர்ந்த பீட்டர் வீரசேகர ஆதரவற்றோர் இல்லத்திற்கு அவர் மீண்டும் செல்லவுள்ளார்.

அதற்கமைய அடுத்த மாதம் அவர் தனது தந்தை மற்றும் காதலனுடன் இலங்கைக்கு வருகைதரவுள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கும் போது, ‘என்னை பெற்ற பெற்றோர் தொடர்பில் எவ்விதமான சான்றுகளும் இல்லை. கைவிடப்பட்ட விடயம் பற்றி நான் நினைத்துப் பார்க்க விரும்பவில்லை.

ஏனனில் என்னை தத்தெடுத்து வளர்த்த பெற்றோர் என்னை மகிழ்ச்சியாக வளர்த்தனர். அன்பாக பார்த்து கொண்டனர். அதனால் நான் அதிக அதிஷ்டசாலியாக கருதுகின்றேன்’ என தெரிவித்தார்.

நான் வளர்ந்த இல்லத்திற்கு உதவ விரும்புகின்றேன். அதற்காக பணம் சேகரிக்கும் இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளேன்.  எனது 30ஆவது பிறந்த நாளை கொண்டாடும் முகமாக இலங்கை வருகைதரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg