Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சைக்கிள்களுடன் வந்தவர்களால் மன்ஹாட்டனில் பதற்றம்!

In கனடா
Updated: 12:54 GMT, Feb 5, 2018 | Published: 12:14 GMT, Feb 5, 2018 |
0 Comments
1056
This post was written by : Thavarajasingam Breesnove

கனடா மன்ஹாட்டன் நகர் வீதி ஒன்றில் சைக்கிள்களில் வந்த சிலரால், அவ்வீதியே கலவரமாகியது. இச்சம்பவம் நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) மாலை 5 மணியளவில் இடம்பெற்றது.

மன்ஹாட்டன் வீதி ஒன்றினுள் சைக்கிள்களுடன் புகுந்த 14 முதல் 16 பேர் கொண்ட கும்பல் ஒன்று வாகன ஓட்டிகளை பயமுறுத்தியது. வீதிகளில் வாகனங்கள் பயணிக்கும் போது எதிர்த்திசையில் சைக்கிள்களுடன் வந்தவர்கள்  வீதியின் குறுக்காக சைக்கிள்களை ஓட்டியதால் சாரதிகள் பதற்றமடைந்துள்ளனர்.

பொதுமக்களையும் இவர்கள் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இக்காட்சி காணொளியாக சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg