Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தோனேஷியாவில் மண்சரிவு: பலரைக் காணவில்லை

In உலகம்
Updated: 12:17 GMT, Feb 5, 2018 | Published: 12:17 GMT, Feb 5, 2018 |
0 Comments
1171
This post was written by : Suganthini

இந்தோனேஷியாவில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து அடை மழை பெய்துவரும் நிலையில் ஏற்பட்டுள்ள மண்சரிவுகளில்; சிக்கி பலர் காணாமல் போயுள்ளதாக, அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இருப்பினும், இந்த மண்சரிவுகளில் சிக்கி எத்தனை பேர் புதையுண்டுள்ளனரென்பது தொடர்பாக இதுவரையில் அறியமுடியவில்லையெனவும், அந்நிலையம் கூறியுள்ளது.

இந்தோனேஷியாவில் பெய்துவரும் அடை மழை காரணமாக, அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்த்தாவில், பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், 4 தடவைகள் மண்சரிவு ஏற்பட்டுள்ளன.

மழை வெள்ளம் காரணமாக குளங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், வான்கதவுகளைத் திறக்க வேண்டிய நிலைமை காணப்படுவதாகவும், இன்று (திங்கட்கிழமை) அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg