Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றி நகரை நவீன படுத்துங்கள்: பிரதமரிடம் ரிஷாட் கோரிக்கை

In இலங்கை
Updated: 17:21 GMT, Feb 5, 2018 | Published: 16:34 GMT, Feb 5, 2018 |
0 Comments
1178
This post was written by : Anojkiyan

சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றி, குறித்த நகரை நவீன முறையில் நிர்மாணிப்பதற்கு உகந்த சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முசலிப் பிரதேச சபையில், மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, சிலாவத்துறையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

இதன்போது ரிஷாட் பதியுதீன் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “முசலிப் பிரதேசத்தில் மீள்குடியேற்றம் இலகுவாக நடந்துவிடவில்லை. யுத்தம் முடிந்து சமாதானம் ஏற்பட்ட பின்னர், இந்தப் பிரதேசத்துக்கு வந்த போது, வெறும் காடாகவும், மயானமகவும், முட்புதர்களாகவுமே இவை காட்சியளித்தன.

மின்சாரம் இருக்கவில்லை. பாடசாலைக் கட்டடங்களும், அலுவலகக் கட்டடங்களும், பள்ளிவாசல்களும், வீடுகளும் தரைமட்டமாக்கப்பட்டும், நிர்மூலமாக்கப்பட்டும் கிடந்தன. வன்னி மக்கள் எமக்கு அளித்த வாக்குகளினால் அரசியல் அதிகாரத்தைப் பெற்று, இந்தப் பிரதேசத்தை மீளக்கட்டியெழுப்ப முடிந்தது. மின்சார வசதிகள், நீர் வசதிகளை நாம் ஏற்படுத்திக் கொடுத்தோம்.

நமது கட்சி கரடுமுரடான பாதையில் பயணிக்கின்றது. இந்தப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அத்தனை அபிவிருத்திகளையும் நாங்கள்தான் மேற்கொண்டோம் என்று எம்மால் நேர்மையுடன் கூறமுடியும். பல்லாயிரக்கணக்கான வீடுகளையும், நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்களையும், சுமார் ஆயிரக்கணக்கான தொழில் வாய்ப்புக்களையும், அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொண்டுள்ளோம்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg