Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாட்டை நேசிக்கும் சகலமக்களும் ஒன்றிணைந்து புதிய பயணத்தை ஆரம்பிக்கவேண்டும்: ஜனாதிபதி

In
Updated: 17:12 GMT, Feb 5, 2018 | Published: 17:12 GMT, Feb 5, 2018 |
0 Comments
1082
This post was written by : Anojkiyan

நாட்டை நேசிக்கும் சகலமக்களும் ஒன்றிணைந்து புதிய பயணத்தை ஆரம்பிக்கவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அம்பாறை பிரதேசத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“நாட்டை நேசிக்கும் சகல மக்களும் ஒன்றிணைந்து நாட்டிற்காக புதியதொரு பயணத்தை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் நிறைவேற்றப்படாத பொறுப்புகளை நிறைவேற்றி மக்களிடையே சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கான செயற்திட்டங்கள் தற்போது வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

எமது கலாசாரம் மற்றும் அடையாளங்களுடன் நாட்டை கட்டியெழுப்பும் வரலாற்று ரீதியான செயற்பணிகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே என்றும் நிறைவேற்றி வருகிறது.

நாட்டில் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் பலவும் நடைபெற்றுள்ளன. இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முன்நிறுத்தி தம்மால் நிறைவேற்றப்படும் பணிகள் நாட்டிற்கு தேவையான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களேயாகும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg