Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாலைதீவில் வெடிக்கும் அரசியல் சர்ச்சை: முன்னாள் ஜனாதிபதி கைது!

In
Updated: 02:56 GMT, Feb 6, 2018 | Published: 02:56 GMT, Feb 6, 2018 |
0 Comments
1217
This post was written by : Varshini

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மவுமூன் அப்துல் கயூம் மற்றும் அந்நாட்டின் பிரதம நீதியரசர் அப்துல்லா சயீட் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மாலைதீவில் வெடித்துள்ள அரசியல் சர்ச்சைகளால் அங்கு 15 நாட்களுக்கு அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியின் வீட்டை நேற்றிரவு சுற்றிவளைத்த பொலிஸார் அவரை கைதுசெய்துள்ளனர்.

அத்தோடு, இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை பிரதம நீதிபதியும் கைதுசெய்யப்பட்டுள்ளார். அத்தோடு, நாடு முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மாலைதீவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஸீட் உள்ளிட்டோரை விடுவிக்குமாறு அண்மையில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும் அதனை தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யாமீன் ஏற்க மறுத்துள்ளார். இதனையடுத்து அங்கு ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, நேற்று முன்தினம் நாடாளுமன்றம் ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில், அந்நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அதே சந்தர்ப்பத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவாகவும் எதிராகவும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

கடந்த 1978ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை மாலைதீவின் ஜனாதிபதியாக மவுமூன் அப்துல் கயூம் பதவிவகித்தார். இவர், தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யாமீனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg