Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென் ஆபிரிக்காவை வீழ்த்தி வெற்றிபெற்றது இந்திய மகளிர் அணி

In கிாிக்கட்
Updated: 04:11 GMT, Feb 6, 2018 | Published: 04:10 GMT, Feb 6, 2018 |
0 Comments
1162
This post was written by : Elakkiya

ஐ.சி.சி. சம்பியன்ஷிப் பெண்கள் ஒருநாள் கிரிக்கட் தொடரில் தென் ஆபிரிக்க அணியை எதிர்கொண்ட இந்திய அணி 88 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

கிம்பர்லியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் இந்திய மகளிர் அணியின் சார்பில் அதிகபட்சமாக மந்தனா 84 ஓட்டங்களையும் அணித்தலைவி மித்தாலி ராஜ் 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து 214 என்ற ஓட்ட இலக்குடன் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க மகளிர் அணி 43.2 ஓவர் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 125 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள 88 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றிபெற்றது.

இந்திய அணியின் சார்பில் பந்து விச்சில், கோஸ்வாமி 4 விக்கெட்களையும், ஷிகா பாண்டே 3 விக்கெட்களையும், பூணம் யாதவ் 2 விக்கெடகளையும் வீழ்த்தினர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg